TNAU: Online application for Masters and PhD courses has started
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சி, தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் 32 துறைகளில் எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன என்றார்.
இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டப் படிப்பில் 400இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்டப்படிப்பில் 200 இடங்களும் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. நடப்புகல்வியாண்டு முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கிவிட்டது. https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இளங்கலை, முதுநிலை படித்துமுடித்த மாணவர்கள் ப்ரொவிஷனல் சான்றிதழ் மூலமாகவும், தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் இருந்து படிப்பு முடிவுற்ற சான்றிதழ் (Course Completion Certificate) பெற்றும் விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது. மாணவர் சேர்க்கைக்கான பிரத்யேக இணையதள பக்கம் ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இயங்கும். கொரோனா காரணமாக கடந்தாண்டுகளில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது, எனவே நடப்பாண்டு உரிய நேரத்தில் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.
ஆகஸ்ட் 27-ம் தேதி மாதிரித் தேர்வும், 28-ம் தேதி நுழைவுத் தேர்வும் நடத்தப்படும். மாதிரித் தேர்வு என்பது மாணவர்கள் அசல் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கான பயிற்சி. நுழைவுத்தேர்வாகும், இது பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும்.
செப்டம்பர் 2-ம் வாரம் சேர்க்கை தொடர்பான பணிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும். செப்டம்பர் 3-வது வாரம் மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிப்புகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். அக்டோபர் முதல் வாரம் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அட்மிஷன் தொடர்பான முக்கிய தேதிகள் அறிய பதிவை தொடரவும்.
SBI, HDFC, ICICI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: அது என்ன?
மேலும் முக்கிய தேதிகள்:
| TNAU இணையதளத்தில் சேர்க்கை அறிவிப்பின் ஹோஸ்டிங் & ஆன்லைன் விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 27.06.2022 |
| விண்ணப்ப ரசீதுக்கான கடைசி தேதி | 08.08.2022 (நள்ளிரவு 12:00 வரை) |
| ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு | 11.08.2022 |
| மாதிரி மற்றும் ஆன்லைன் முதன்மை நுழைவுத் தேர்வு நடத்துதல் | 27.08.2022 |
| தேர்வு பட்டியல் அறிவிப்பு | செப்டம்பர் 2வது வாரம், 2022 |
| சேர்க்கை மற்றும் கட்டணம் செலுத்துதல் | செப்டம்பர் 3வது வாரம், 2022 |
| மான்சூன் செமஸ்டர் பதிவு | செப்டம்பர் 4, 2022 |
மேலும் படிக்க:
ஆடு வளர்ப்பின் முதல் கட்டத்தில், நீங்கள் செய்யும் பொதுவான தவறுகள்
Share your comments