தேர்வர்கள் கவனத்திற்கு – 2 கட்டங்களாக கணினி வழியில் தேர்வு! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கணினி வழியில் 2 கட்டங்களாக தேர்வு நடத்த உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் முதல் தாள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் 50% மதிப்பெண் தேர்ச்சி பெற்றதுடன் டிப்ளமோவில் ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் இரண்டாம் தாள் விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது ஆசிரியர் பயிற்சியில் (B.Ed) இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து TET தேர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வு கணினி வழியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டத் தேர்வாக நடைபெறும். இதனை தொடர்ந்து TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் பிரத்யேக மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments