கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.
முடிவுகள் வெளியீடு
அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்து இருந்தது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை TNPSC இணையதளத்தில், தேர்வர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!
Share your comments