தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதாவது (Tamil Nadu Public Service Commission) ஆனது தமிழ்நாடு தொழில்துறை துணைப் பணியில் வேதியியலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனவரி 23, 2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்-தொழில் மற்றும் வணிகத் துறையில் மொத்தம் 3 வேதியியலாளர் பணியிடங்களுக்கு TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு-ஜூலை 1, 2021 தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்-ரூ. 37,700 முதல் 1,19,500 வரை வழங்கப்படும்.
கல்வி தகுதி- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆராய்ச்சியில் அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த கல்வி தகுதி மற்றும் வயது வரம்பை பூர்த்தி செய்வோர் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை- தேர்வு இரண்டு நிலைகளில் செய்யப்படும், அதாவது, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு-க்கான தேதி:
தேர்வு மார்ச் 19, 2022 அன்று இரண்டு அமர்வுகளாக நடைபெறும்: தாள் 1- காலை 9.30மணி முதல் மதியம் 12.30மணி வரையும், தாள் 2- 2.00 மணி முதல் மாலை 5.00மணி வரையும் நடைபெறும்.
நேர்காணலுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள், உடல் தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு,
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு எச்சரிக்கை! குளிர்காலத்தில் வாழையில் இதை கவனிக்கவும்
5 நாட்களில் குணமாகிறதா ஒமிக்ரான்? ஆனால் எச்சரிக்கை மிக முக்கியம்!
Share your comments