இந்தியாவின் இசைக்குரலாக ஒலித்த லதா மங்கேஷ்கரின் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் யாருக்கு என்பது தற்போது புரியாத புதிராக உள்ளது.
இந்தியாவின் இசைக்குயில் என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6ம் தேதி காலமானார்.
இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதால், லதா மங்கேஷ்கர், யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
அதனால் காற்றில் கலந்த குயிலோசைக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கரின் வாரிசு யார் என்ற கேள்வி எழுகிறது. அவருக்கு இசை வாரிசு என பலர் இருந்தாலும், சொத்துக்கான உரிமை யாருக்கு? கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவது யார்? என்பது தற்போதையக் கேள்வியாக உள்ளது.
ரூ.40 லட்சம் வரை
1942ல் தனது 13வது வயதில் இசை உலகில் கால் பதித்த லதா மங்கேஷ்கரின் காலத்தை தாண்டி நிற்கும் இசைக்கு விலையே மதிப்பிடமுடியாது.25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய லதா, ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த லதா, புகழை மட்டும் அல்ல, ஏராளமான செல்வத்தையும் சேர்த்து வைத்தார். மங்கேஷ்கரின் சொத்துக்களின் நிகர மதிப்பு சுமார் 370 கோடி ரூபாய். அவர் மும்பையின் ஆடம்பரமான பகுதியில் பெடர் சாலையில் கட்டப்பட்ட 'பிரபுகுஞ்ச் பவன்'என்ற பங்களாவில் வசித்து வந்த லதா மங்கேஷ்கரின் வீடு, பல கோடி ரூபாய் மதிப்புடையது.
அழகான புடவைகள் மற்றும் நகைகள் அணிவதில் விருப்பம் கொண்ட லதா மங்கேஷ்கருக்கு கார்களும் மிகவும் பிடித்தமானது. பல விலையுயர்ந்த கார்களும் அவரின் சொத்தாக இருக்கின்றன. கோடிக்கணக்கான விலைமதிப்புள்ள வீடு, விலைமதிப்பற்ற நகைகள் தவிர, அவரது பாடல்களின் ராயல்டி தொகை என இப்போது இருக்கும் சொத்துக்கள், மற்றும் ராயல்டி மூலம் கிடைக்கவிருக்கும் எதிர்கால வருமானம் என அனைத்துமே யாருக்கு கிடைக்கும்?
லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர்,இந்தச் சொத்துகளுக்கான வாரிசாக இருப்பார் என்று யூகிக்கப்பட்டாலும், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேஷ்கரின் மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர் , ஆஷா போஸ்லே ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவரும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments