1. செய்திகள்

வருமான வரிதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்-தவறினால் சிறை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Today is the last day to file income tax - jail if wrong!

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்ய இன்றேக் கடைசிநாள். தவறுவோர், சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் ஆபத்து உள்ளது. முன்னதாக, வருமான வரித்தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

பான் கார்டு வைத்திருக்கும் அனைவருமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும் என நிதித்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. அதேநேரத்தில் வருமானம் ஈட்டுவோர் அனைவருமே வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் எனவும் நிதித்துறை அறிவுறுத்துகிறது.

கடைசி நாள்

இந்நிலையில், 2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று ஜூலை 31ம் தேதிதான் கடைசி நாள். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிதாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும் இன்றைக்குள் வரிதாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.

அறிவுறுத்தல்

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், நேற்று இரவு 8.36 மணி வரை 5 கோடிக்கு அதிகமான வருமான வரிதாக்கல் முடிந்துள்ளது. இதற்கான கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி (இன்று) என்பதால் நீங்களும் உங்கள் வரிதாக்கலை செய்து அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வருமான வரி செலுத்துவோரை அறிவுறுத்தி இருந்தது.

கோரிக்கை

கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்து இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வரிதாக்கல் நடைபெறும் என வருமான வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. முன்னதாக வரித்தாக்கல் செய்வதற்கானக் காலக்கெடுவை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அபராதம்

ஆனால், காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே கைவிரித்துவிட்டது. அதனால், இன்றைக்குள் வரிமான வரியைத் தாக்கல் செய்யாவிட்டால், அபராதம், சிறை தண்டனை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

English Summary: Today is the last day to file income tax - jail if wrong!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.