தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க காலமாக கருதப்படும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது விசைபடகுகளை சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது தடைக்காலம் இன்று நள்ளிரவு நிறைவடைகிறது. இதனால் நாளை மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து மொத்தம் 1,750 விசைப் படகுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக தெரிகிறது.
மீன்பிடிக்க செல்வதற்கு ஏதுவாக மீனவர்கள், கரையில் ஏற்றப்பட்ட விசைப்படகுகளை கடலுக்குள் இறக்கி வருகின்றனர். மேலும், மீன்பிடிக்க செல்வதற்கு தேவையாக டீசல், வலைகள், உணவுப்பொருட்கள்,மற்றும் ஐஸ் கட்டிகள் வாங்கி படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
புதுச்சேரிக்குள் சொகுசு கப்பல் வருவதற்கு ஏன் அனுமதி இல்லை? விளக்கம்!
Share your comments