விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் தொடங்கியுள்ள இயற்கை அரிசி திருவிழாவில் பாரம்பரிய அரிசி கண்காட்சி, இயற்கை உணவு, நெல் வகை கண்காட்சியை விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல், அரிசி, உணவு, விதைகளின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.
விழுப்புரம் நகர பகுதியான கிழக்கு பாண்டி ரோடு, ரெட்டியார் மில் பேருந்து நிறுத்தத்திலுள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ ஜெயசக்தி திருமணம் மண்டபத்தில், பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி கண்காட்சி, பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் பாரம்பரிய அரிசி வகைகளான, கருப்பு கவுனி , மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம் ,கருத்தக்கார், மூங்கில் அரிசி ,குழியடிச்சான்,கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா , கருங்குறுவை கார் அரிசி என பாரம்பரிய காய்கறி விதைகள் , போன்றவை இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது . அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய அரிசி ரகத்தில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சிக்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்தும் , சென்னை, சேலம், விருதாச்சலம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி கடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு வருகை புரிந்தனர்
இக்கண்காட்சி முக்கிய நோக்கமே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதும், இயற்கை விவசாயம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆகும். மேலும் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது.
மேலும், பாரம்பரிய விதைகளான அவரை, பாகல், மிதி பாகல்,முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, யாழ்பானம்முருங்கை உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட காய்கறி விதைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தபட்டு விற்பனைக்கு வைக்கபட்டதை விவசாயிகள் வாங்கி சென்றனர்.
மேலும் படிக்க
Share your comments