1. செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறையின் கடும் எச்சரிக்கை..!!

R. Balakrishnan
R. Balakrishnan
Two wheeler

தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் (Traffic)

தமிழகத்தில் பல பகுதிகளில் நோ பார்க்கிங் என்ற போர்டு வைக்கப்பட்ட போதிலும் அதில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வாகன ஓட்டிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் தமிழக போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதற்காக முதலில் வட சென்னை பகுதியில் முக்கிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவெற்றியூர் மண்டலத்தில் சட்டவிரோதமாக நோபார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டப்படும். முதல் முறை நோட்டீஸ் மட்டுமே ஓட்டப்படும் அபராதம் எதுவும் வசூல் செய்யப்படாது. மீண்டும் மீண்டும் அந்த வாகனம் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

அதன் பிறகு அந்த வாகனம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு விதியை மீறி செயல்பட்டதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது சென்னையில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் வாகனத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு 40 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பான பார்க்கிங் பகுதிகள் சென்னையில் 88 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

SBI வாடிக்கையாளர்களே உஷார்: திடீர் எச்சரிக்கை விடுத்த வங்கி!

அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட்: ரூ.4,000 போனஸ் அறிவிப்பு!

English Summary: Traffic department's warning to motorists..!! Published on: 01 September 2022, 03:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.