பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சி கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் உள்ள அல்லபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
விதை உற்பத்தி பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் பயறு வகைத்துறையில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம், பயறு வகைப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சி கோயமுத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டாரத்தில் உள்ள அல்லபாளையம் கிராமத்தில் 25.01.2021 அன்று நடத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு பயறு வகைப்பயிர்களில் தரமான விதை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சியினை அளித்து விதை மாற்று விகிதத்தை அதிகப்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
பயறு வகைத்துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இரா. பா.ஞானமலர் அவர்கள் தொழில்நுட்பப் பயிற்சிக்கு வந்த விவசாய பெருமக்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநா் முனைவர். சே. கீதா அவர்கள் சிறப்புரையாற்றி அதிக மகசூல் தரக்கூடிய பயறு வகைப் பயிர்களின் இரகங்களையும் அதன் முக்கிய குணாதிசியங்களையும் எடுத்துரைத்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
அதிக லாபம் தரும் விதை உற்பத்தி
மேலும் இப்பயிற்சியில், விதை உற்பத்தியின் மூலம், தானிய உற்பத்தியைக் காட்டிலும் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம். மேலும் இப்பயிற்சியில் துவரை விதை உற்பத்தியில் இனத்தூய்மையைப் பராமரிப்பது பற்றியும் அவற்றின் வழி முறைகளையும், தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் பயறு வகைப் பயிர்களின் விதை நேர்த்தி பற்றியும், பயறு வகைப் பயிர்களில் மேற்கொள்ள வேண்டிய உழவியல் தொழில்நுட்பங்கள் பற்றியும், பயறு வகைகளில் சேதத்தை உண்டாக்கும் பூச்சிகளைப் பற்றியும் அவற்றின் ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை பற்றியும் விளக்கமளித்தனர்.
இறுதியாக, உதவிப்பேராசிரியர் முனைவர். ஆ. தங்க ஹேமாவதி அவர்கள் தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். இப்பயிற்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments