ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு (Awareness)
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறியதாவது:-
தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் துறை சார்பில் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அலட்சியப்போக்கு (Indifference)
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மக்கள் உணர்ந்தும், அதனை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு, அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஹெல்மெட் கட்டாயம் (Helmet mandatory)
எனினும் மாவட்டத்தில் 75 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதுகாப்பாக செல்வதற்காக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
கடைப்பிடிக்க வேண்டும் (To adhere to)
மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறினார்.
உயிர்காக்கும் ஹெல்மெட் (Life-saving helmet)
வாகன விபத்துக்கு ஆளாகி, வாழ்க்கையையே இழப்பதைக்காட்டிலும், ஹெல்மட்டை அணிந்து செல்வதன் மூலம் விபத்தில் இருந்துத் தப்புவதுடன், உயிரையும் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதை தனிநபர் ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது.
மேலும் படிக்க...
பாம்பை விட்டு மனைவியைக் கொலை செய்த வழக்கு- நாளை பரபரப்புத் தீர்ப்பு!
Share your comments