ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்புகள் பயில பல்கலைக்கழக மானியக்குழு விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.
வரவிருக்கும் காலத்தில், நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்-லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.
விரைவில் நாடு முழுவதும் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்-லைன் வழியில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
முன்னதாக பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளில் சேரலாம் என்கிற நடைமுறையை மாற்றி 900 கல்லூரிகளில் நாடு முழுவதும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த புதிய நடைமுறையில், ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்புகளில் சேரும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அமல்படுத்த இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றுவது அவசியமாகும்.
ஆன்-லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் சந்தைக்கு, பிரதமர் ஆதரவு உறுதி!
தமிழகம்: அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு! வானிலை அறிக்கை
Share your comments