கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகிறது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் மாதம்தோறும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 12-வது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு மகிழ்ச்சியுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி வசூல் குறித்து கூறும்போது, ரூ.1,43,612 கோடி அளவுக்கு ஜிஎச்டி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாத வசூலுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி கடந்த 2 ஆண்டுகளாக இருந்த கொரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் இந்த ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது என்று ஒன்றிய நிதி அமைச்சம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments