UPSC Prelims 2023 அறிவிப்பு: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'சிவில் சர்வீசஸ் தேர்வு 2023' (UPSC CSE 2022 அறிவிப்பு-க்கான அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, மேலும் தேர்வு தேதி என பல விவரங்களை தெரிந்துக்கொள்ள, கீழே படியுங்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு காணும் இளைஞர்கள் அனைவரும் www.upsc.gov.in அல்லது www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 1,105 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு மே 28, 2023 அன்று நடைபெறும்.
UPSC பிரிலிம்ஸ் 2023: காலெண்டரின் படி முக்கியமான தேதிகள் விவரம்: (UPSC Prelims 2023: Important Dates by Calendar Details:)
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2023- (பிரிலிம்ஸ்) அறிவிப்பு வெளியீட்டு தேதி - பிப்ரவரி 1, 2023
விண்ணப்பத்தை திரும்பப் பெறுதல் -அறிவிக்கப்படும்
விண்ணப்பத்தின் கடைசி தேதி - பிப்ரவரி 21, 2023
முதல்நிலைத் தேர்வு தேதி - மே 28, 2023
முதன்மைத் தேர்வு தேதி - 15 செப்டம்பர் 2023
விண்ணப்ப படிவத்தில் மாற்றம் - பிப்ரவரி 22, 2023 முதல் பிப்ரவரி 28, 2023 வரை
மேலும் படிக்க: இந்தியா தலைமையில் ஜி-20 மாநாடு: தினை ஆண்டு 2023
UPSC பிரிலிம்ஸ் 2023: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான தகுதி (Eligibility)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம். இளங்கலை பட்டப் படிப்பின் இறுதித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். அத்தகைய விண்ணப்பதாரர்கள் சிவில் சர்வீசஸ் (முதன்மைத் தேர்வு) படிவத்தை பூர்த்தி செய்யும் போது இளங்கலை பட்டம் பெற்றதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
UPSC பிரிலிம்ஸ் 2023: இந்திய வன சேவை தேர்வுக்கான தகுதி (Eligibility for IFS Examination)
விலங்கு பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டம். அல்லது
- வேளாண்மை / வனவியல் துறையில் இளங்கலை பட்டம். அல்லது
- பொறியியலில் இளங்கலை பட்டம், பெற்றிருக்க வேண்டும்.
UPSC பிரிலிம்ஸ் 2023: வயது வரம்பு
குறைந்தபட்ச வயது - 21 ஆண்டுகள். அதிகபட்ச வயது 32 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். வயது 1 ஆகஸ்ட் 2023 முதல் கணக்கிடப்படும். அதாவது, விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 2, 1991க்கு முன்னதாகவும் 1 ஆகஸ்ட் 2002க்குப் பிறகாமலும் பிறந்திருக்க வேண்டும்.
OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST-யினருக்கு ஐந்து வருடங்களும், (PWD) உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு பத்து வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு என்பது குறிப்பிடதக்கது.
UPSC Prelims 2022: விண்ணப்பக் கட்டணம்
- ஸ்டேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் ரொக்கம் அல்லது நெட்பேங்கிங் அல்லது மாஸ்டர்கார்டு/டெபிட் கார்டு மூலம் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையின் போது பணம் செலுத்தும் விருப்பம் கிடைக்கும்.
- SC, ST, உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் படிக்க:
G20: 3 நாள் கூட்டம் இந்தூரில் தொடக்கம், விவசாய பெருமக்களின் சங்கமம்
Share your comments