பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி நாட்டின் 11 மாநிலங்களில் 1 லட்சம் கி.மீ., தூரமுள்ள சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள மாநிலங்களி, நாள் தோறும் 25 ஆயிரத்து 940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
எஞ்சியவற்றில் முறையாகப் பராமரிக்கப்படாததால், பெருமளவு பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் சேருகின்றன. அது தவிர குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகிறது. மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீரில் கலக்கும் கடலில் சேர்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு(Protect Environment)
எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள், சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த 2016ம் ஆண்டு அறிவித்தார்.
இதன் அடிப்படையில், நாட்டிலேயே முதல் முறையாக கடந்த 2018ம் ஆண்டு ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி, சாலைகள் அமைக்க பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தியது. இதே போல் ஜம்மு -காஷ்மீரில் 270 கி.மீ., சாலை அமைக்க பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் 1.6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டன.
1 லட்சம் கி.மீ.சாலைகள்
இதுவரை, பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 11 மாநிலங்களில் சுமார் 1 லட்சம் கி.மீ., சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இதனை இரு மடங்காக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிற மாநிலங்களிலும், சாலைகள் அமைப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்த நடவடிக்க எடுக்கப்பட உள்ளது.
ஒரு கி.மீ., சாலை அமைக்க பொதுவாக 10 டன் தார் தேவை. அதற்கு மாற்றாக இந்த பிளாஸ்டிக் சாலை திட்டத்தின்படி, ஒரு கி.மீ சாலை அமைக்க 9 டன் தார் மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தப்படுகிறது.
ரூ.30 ஆயிரம் சேமிப்பு (Save)
அதாவது 6 முதல் 8 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளும், 92 முதல் 94 சதவீதம் தாரும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 டன் தாரின் கொள்முதல் விலையான 30 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
வீடியோ மூலம் வீட்டிற்கு வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் இ-சஞ்சீவனி திட்டம்
புலிகள் கணக்கெடுப்பில் நவீன யுக்தி - இந்தியா கின்னஸ் சாதனை!!
Share your comments