இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 950 அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பணியிடங்கள் குறித்த பல்வேறு விவரங்களை கீழே பதிவில் காணவும்.
வேலைவாய்ப்பு குறித்த விவரம்: (Details about employment)
பணி:
Assistant
காலியிடங்கள்:
950
சம்பளம்:
மாதம் ரூ.20,700 முதல் 55,700
வயதுவரம்பு:
01.02.2022 தேதியின்படி, 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
குறைந்தபட்சம் 50 சதவித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் அவசியம்.
தேர்வு நடைபெறும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களைக் கொண்டு நடக்கும். முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.
எவ்வாறு விண்ணபிக்க வேண்டும்:
https://www.rbi.org.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு தோராயமாக 2022 மார்ச் 26,27 நாட்களில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் முதல் நிலை எழுத்துத் தேர்வு மையத்தின் விவரங்கள்:
சென்னை, கோவை, மதுரை, நாமக்கல் சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 08.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.rbi.org.in/ அல்லது https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085 என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
ஆடு வளர்ப்பின் இரண்டாம் கட்டத்தில் செய்யப்படும் பொதுவான தவறுகள்
Share your comments