சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு (Counselling)
தமிழகத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோற்றும் ஒற்றைச்சாளரக் கலந்தாய்வு மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது.
இதில் சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்து விட்டது. இதன் முடிவுகள் சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஒரு மாணவர் கூட (Even a student)
ஏனெனில், 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
31 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
ஆக இந்த 100 கல்லூரிகளின் முதலாண்டு வகுப்பறைகள் இந்தக் கல்வியாண்டில், காலிக் கட்டிடங்களாகவேக் காட்சியளிக்கும்.
குறைவும் ஆர்வம் (Less interested)
படிப்பிற்கு ஏற்றத் தகுந்த வேலைக் கிடைக்காததால், பொறியியல் பட்டப்படிப்பின் மீதான ஆர்வம் அண்மைகாலமாகக் குறைந்து வருவதுக் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அறிவிப்பு!
சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் தயாரிக்கப் பயிற்சி- TNAU ஏற்பாடு!
Share your comments