உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்று தான் இதற்கு தீர்வாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறது.
தமிழகத்தின், சென்னை மாநகராட்சி எல்லையில், 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு கூறினார்.
24 மணி நேர தடுப்பூசி
சென்னையில், 24 மணி நேரம் தடுப்பூசி போடும் திட்டம் நேற்று துவங்கியது. அடையாறு, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அமைச்சர் பேசியதாவது: சென்னையில் 24 மணி நேரம் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இரவு நேரம், எப்போது வந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.பொதுமக்கள் இதை பயன்படுத்தி, கொரோனா பரவலை தடுக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை, 41.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என, 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி (Vaccine) போடப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சியில், ஒப்பந்த ஊழியர்களை, தற்காலிக ஊழியர்கள் என்று தான் நியமிக்கிறோம். அவர்கள், தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நிதி நிலைக்கு ஏற்ப, அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் மனிஷ், வேளச்சேரி எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு நீட்டிப்பு
கர்நாடகாவில் சொதப்பல்: சில நிமிடங்களில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி!
Share your comments