1. செய்திகள்

நாடு முழுதும் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி

R. Balakrishnan
R. Balakrishnan
Vaccine
Credit : Dinamalar

குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல், கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளதால் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும், எனஅவர் தெரிவித்தார். அடுத்த மாதம் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும்' என, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். இந்த அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. பாரத் பயோடெக் மற்றும் சைடஸ் கடிலா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் குழந்தைகளுக்கான தடுப்பூசி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. 'சைடஸ் கடிலா நிறுவன தடுப்பூசியின் பரிசோதனைகள் முடிந்துவிட்டதால், செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்' என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகப்பெரிய தடுப்பூசி நாடு

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்த மாதம் முதல், குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிக்க உரிமம் (License) வழங்கப்பட உள்ளன. எனவே, தடுப்பூசி தயாரிப்பில் உலக அளவில் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும். இதன் வாயிலாக கொரோனா பரவலை மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். நாடு முழுதும் பள்ளிகளை திறக்க முடியும்.

ஆதாரமற்றது

இதற்கிடையே, இம்மாத இறுதிக்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், 'இந்த இலக்கை அடைவது சாத்தியமில்லை' என, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, மத்திய அரசின் தடுப்பூசி இலக்கு சாத்தியமில்லை என வெளியாகி உள்ள செய்தி, அடிப்படையில் ஆதாரமற்றது; அதில் உண்மையில்லை.
இம்மாத இறுதிக்குள், 51.60 கோடி 'டோஸ்' தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்று தான் கடந்த மே மாதம் மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஜனவரி முதல் ஜூலை 31 வரை 51.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலக்கு

இந்த தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவை படிப்படியாக மக்களுக்கு போடப்படும். கடந்த ஜனவரியில் இருந்து இன்றைய தேதி வரை 45.70 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாடு முழுதும் வினியோகிக்கப்பட்டுள்ளன.மேலும் 6.03 கோடி டோஸ், வரும் 31ம் தேதிக்குள் வினியோகிக்கப்படும். இதை சேர்த்தால் 51.73 கோடி என்ற இலக்கை மத்திய அரசு எட்டிவிடும். நம் நாட்டில் 44.19 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் இது மிகப்பெரிய எண்ணிக்கை. இதில் 9.60 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன. ஜூலையில் மட்டும், 10.62 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுஉள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

27 வகை கொரோனாக்களை சமாளிக்கும் திறன் பெற்ற தடுப்பு மருந்து!

ஒலிம்பிக் போட்டி நிகழும் டோக்கியோவில் ஒரே நாளில் 2848 பேர் கொரோனாவால் பாதிப்பு

English Summary: Vaccine for babies across the country from August! Published on: 28 July 2021, 04:13 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.