5 முதல் 11 வயதுடைய குழந்தைகள் கோவிட் தாக்குதலுக்கு உள்ளாவதால் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கோவிட்- 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று, எந்தப் பாரபட்சமும் இன்றி, அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளிலும் பரவியது. ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவசர அவசரமாகத் தடுப்பூசி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அமலுக்கும் வந்தன.
பாதுகாப்புக் கவசம் (Protective shield)
இந்தியாவைப் பொருத்தவரை, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதே, கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் தடுப்பூசிதான் உயிர் பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது. இதேபோல் உலக நாடுகளிலும் தடுப்பூசியே கொரோனா பலியில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் கவசமாக மாறியுள்ளது.
அந்த வகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இஸ்ரேல் மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியது. இதையடுத்து, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது.
3- வது அலை (3rd wave)
ஆனால், இஸ்ரேலில் கடந்த கோடை காலத்தில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்தது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் கொரோனாத் தாக்கியது.
3-வது டோஸ்
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமோ, உயிரிழப்போ ஏற்படாவிட்டாலும், மூன்றாவது அலை பரவலின் வேகம் அந்நாட்டை கவலையடையச் செய்தது. இதனால், பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இது தகுதி வாய்ந்த அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது.
பிரதமர் விளக்கம்
இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நஃப்டாலி பென்னெட் தெரிவித்ததாவது: கொரோனாப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இப்போது நாட்டில் அன்றாடம் பதிவாகும் தொற்றில் பாதி எண்ணிக்கை குழந்தைகள் வாயிலாகவே ஏற்படுகிறது. குறிப்பாக 11 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5.7 மில்லியன்
இஸ்ரேல் நாட்டில் ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன். அதில் 5.7 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments