1. செய்திகள்

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா? 59 நிமிடங்களில் கடன் பெறலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
image credit : Paizabazar

நீங்கள் தொழில் முனைவோரா அல்லது சிறு தொழிலாளியா எதாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இந்த செய்தி உங்களுக்கு பலன் தரும்.

தற்போதைய கொரோனா காலாத்தில் பெரும்பாலானோர் வேலையின்றி தவித்து வருகின்றர். அவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், விவசாயம் சாராத சிறு தொழிலாலர்களுக்கு SBI வங்கி 10,000 முதல் 10,00,000 வரை எளிய முறையில் கடனை பெற்றிட முடியும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டத்தில் கீழ், தொழிலாளர்கள் கடன் பெற வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் வீட்டில் இருந்தே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

59 நொடிகளில் கடன் பெறலாம்

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வங்கி இணையத்திளத்தில் கேட்கப்படும் ஆவணங்களை நீங்கள் சரியாக பூர்த்திசெய்யும் பட்சத்தில் உங்களுக்கான கடன் வெறும் 59 நிமிடங்களில் அனுமதிக்கப்படும். இதனால் அலைச்சல் குறைக்கப்படுகறது.

வட்டி விகிதம்

முத்ரா திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% ஆக தொடங்குகிறது.

mudra scheme

பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Loan)

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் விவசாயம் அல்லாத சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த முத்ரா கடன் திட்டம் 3 வகைகளில் வழங்கப்படுகிறது.

  • சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.

  • கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.

  • தருண் (TARUN) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்?

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், அதற்கு பணம் தேவைப்பட்டாலும் , நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கடன் பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

To Apply loan click here 


மேலும் படிக்க..

மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்?

ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்குவது எப்படி?

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

English Summary: Want to start your own business? Get a loan in 59 minutes Through State bank of india details here Published on: 31 August 2020, 05:48 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.