சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலரைத் தொட்டு உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷியா இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உடனடியாக அதிடித் தாக்குதலைத் தொடங்கின. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தின. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் தொடங்கியது.
இந்த அசாதாரண சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து விலை 100 டாலரை தாண்டியது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலரை தொட்டுள்ளது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு உச்ச அளவீட்டைத் தொட்டு இருந்தது.சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தொட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்வதாகக் காரணம் காட்டி, பெட்ரோல் டீசல் விலையில் உயர்வைக் கடைப்பிடிக்கும் எண்ணெய் நிறுவனங்கள், இந்த விலைஉயர்வை அப்படியே வாடிக்கையாளர்கள் தலையில் போடும் எனத் தெரிகிறது.எனவே வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments