சிறு மற்றும் குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி நுண்ணிர் பாசனத் திட்டத்தின் கீழ் பல விவசாயிகள் பதிவு செய்து 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திர வட்டத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் கூறுகையில், மத்திய அரசின் "ஒவ்வொரு துளி நீரிலும் அதிக பயிர்ச் சாகுபடி" என்ற திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 400 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 600 ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் பதிவு செய்து சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
தற்போது இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு, அதே மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் நீரை சேமித்து வைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர்த்தொட்டி கட்டுவதற்கு ரூ.40,000 மானியமும், நீர் கடத்தும் குழாய்களை அமைப்பதற்கு ரூ.10,000 மானியமும், டீசல் என்ஜின் அல்லது மின் மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000 மானியமும் வழங்கப்பட உள்ளது.
மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பணி ஆணை பெறப்பட்ட பின், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இத்திட்டத்திம் குறித்த விரிவான தகவல் பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிலாம்.
Share your comments