கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே காரைக்குடி பகுதியில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் வந்து குவிய தொடங்கியது.
தர்பூசணி பழங்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைக்கால வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த கோடைக்காலத்தில் தென் மாவட்டங்களில் அதிக வெப்ப நிலை காணப்படும். இதையடுத்து பலரும் கோடை விடுமுறையை சமாளிக்க குளிர் பிரதேசங்களை நாடி செல்வது வழக்கம். மேலும் ஒரு சிலர் கோடைக்காலங்களில் குளிர்ச்சியான பழங்கள், குளிர் பானங்களை அதிக அளவில் பருகுவதும் வழக்கம்.
தர்பூசணி (Watermelon)
கடந்தாண்டும், இந்தாண்டும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பருவ மழை அதிகம் பெய்ததால் கடந்தாண்டு கோடைக்காலத்தின் போது வெயில் தாக்கம் இல்லை. இந்தாண்டும் தொடக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்ததால் தற்போது பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதையடுத்து இந்தாண்டும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு வருகிற மே மாதம் 4-ந்தேதியில் தொடங்கும் அக்னி நட்சத்திரம் 24 நாட்கள் வரை நீடித்து மே 28-ந்தேதி முடிகிறது.
விலை உயர்வு (Price Increases)
விலை உயர்வு இருப்பினும் தற்போது வர உள்ள கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில் தற்போது காரைக்குடி பகுதியில் தர்பூசணி பழங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வந்து குவிக்கப்பட்டுள்ளன. காரைக்குடி சண்முகராஜா வீதியில் திண்டிவனம் பகுதியில் இருந்து சுமார் 5 டன்னுக்கும் மேலாக தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்தாண்டை விட இந்தாண்டு போக்குவரத்து, வாடகை உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி அக்பர் அலி கூறியதாவது:-
ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் திண்டிவனம் பகுதியில் இருந்து விற்பனைக்காக காரைக்குடிக்கு வருவது வழக்கம். கடந்தாண்டை விட இந்தாண்டு டீசல் விலை உயர்ந்துள்ளதால் போக்குவரத்து வாடகையும் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு டன்னுக்கு ரூ.18 ஆயிரம் வரை கொடுத்த நிலையில் தற்போது டன்னுக்கு ரூ.25 ஆயிரம் என விலை அதிகரித்துள்ளது.
இதனால் கணிசமான அளவில் இந்த பழங்களில் இருந்து லாபத்தை பெறமுடியவில்லை. அதிலும் அங்கிருந்து ஏற்றி வந்த பழங்களில் பெரும்பாலும் சேதமாகி விடுவதால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
மேலும் படிக்க
இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!
Share your comments