உலக நாடுகள் கோவிட் பெருந்தொற்றின் 3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில், மூன்றாவது அலையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
WHO எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் 2ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.
தற்போது துரதிர்ஷ்டவசமாக நாம் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். டெல்டா வைரஸ் பரவல் காரணமாக உலக அளவில் கோவிட் தொற்றும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. டெல்டா வைரஸ் தற்போது உலகில் 111 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நாடுகளில் கடந்த நான்கு வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தனிமனித விலகலையும், முகக் கவசம் அணிவதையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் படிக்க
மன உளைச்சலில் மருத்துவர்கள்: தீர்வு காண உதவி மையம்!
எந்நேரத்திலும் கொரோனா 3வது அலை தாக்கலாம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!
Share your comments