மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று விவசாய சட்டங்களைக் (Agri Laws) கொண்டுவந்தது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல் சில வாரங்கள் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் ஆட்சியிலிருந்த அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்தது. அதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லியை (Delhi) முற்றுகையிட்ட விவசாயிகள் கடந்த நவம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடரும் போராட்டம்
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் (Tractors) நாடாளுமன்றம் முற்றுகையிட தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். நேற்று மத்திய பிரதேச மாநிலம், சிவப்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி போராட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கூ, திக்ரி மற்றும் காசிப்பூரில் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 104வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்த நிலையில் தங்களது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த போவதாக ராகேஷ் தியாகத் (Rakesh Dhiyagath) கூறியிருக்கிறார். தேவைப்பட்டால் லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சென்று நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட தயாராக இருப்பதாக தியாகத் எச்சரித்துள்ளார். கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லி நகருக்குள் புகுந்தவை வெறும் 3500 டிராக்டர்கள் தான் என்று தியாகத் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தேவைப்பட்டால், பல லட்சம் டிராக்டர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு 40,000 பெண்கள் படையெடுப்பு!
நெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்கலாம்! ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை!
Share your comments