தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவக் காற்று சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென் ஆந்திர கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும். குறிப்பாக வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், இதனால் கடலுக்கு செல்லும் போது 400 கி.மீ தூரத்திற்கு அப்பால் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments