1. செய்திகள்

காவலர்களுக்கு வார ஓய்வு - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Weekend rest for policemen - DGP Silenthrababu orders!

தமிழகத்தில் காவல்துறையினருக்கு வார விடுமுறை கட்டாயம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வு அவசியம் (Rest is essential)

ஓய்வெடுக்காமல் வேலை செய்வது என்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதனால்தான்,வாரத்தின் முதல்நாள் ஓய்வு என்று கடைப்பிடித்தார்கள் நம் முன்னோர்கள்.

விடுமுறை இல்லை (No holidays)

அதன்படி தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வார ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,காவல் துறையினருக்கு இந்தவிடுப்பு வழங்கப்படாமல் இருந்தது.

காவல் துறையினருக்கு வார ஓய்வு கட்டாயம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கட்டாயம் ஓய்வு (Forced rest)

காவலர்கள் தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ள ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.

மிகைநேர ஊதியம் (Overtime pay)

வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

போலீஸாரின் பிறந்தநாள், திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக, அந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.

வானொலி மூலம் (By radio)

காவல் துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துச்செய்தி, மாவட்ட, மாநகர காவல்கட்டுப்பாட்டு அறையின் வானொலிமூலமாக சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதைத் தவறாமல் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீஸார் மகிழ்ச்சி (Police happy)

இந்த உத்தரவு காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க...

இறந்த செல்களை புதுப்பிக்கிறது இசை தெரபி!

மைதா கெடுதல் விளைவிக்கும் என்று சொல்வது ஏன்?

English Summary: Weekend rest for policemen - DGP Silenthrababu orders! Published on: 23 September 2021, 03:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.