இந்தியாவில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த தடுப்பூசி போடப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
பூஸ்டர் டோஸ் (Booster Dose)
இதுவரை இந்தியாவில் 125 கோடி டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளன. நாட்டு மக்கள்தொகையில் சுமார் 61% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 40% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓமிக்ரான் அச்சம் அதிகரித்ததால் பூஸ்டர் டோஸ் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இரண்டு டோஸ்களில் இருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி 3 மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னுரிமை (Preference)
அதன்படி வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் இந்த பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். முன்களப் பணியாளர்களுக்கு இந்த 3ஆம் டோஸ் வேக்சின் போடப்படும். அதேபோல 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு முதல் 2 டோஸ்கள் எந்த வேக்சின் அளிக்கப்பட்டதோ அதே வேக்சின் தான் 3ஆவது டோஸாக போடப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது முதலில் ஒருவருக்கு கோவிஷீல்டு போடப்பட்டிருந்தால் 3ஆவது டோசும் கோவிஷீல்டு வேக்சினே போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க
பிரதமர் மோடி அறிவித்த உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியின் சிறப்பம்சங்கள்!
2-வது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் டோஸுக்கும் கால இடைவெளி எவ்வளவு?
Share your comments