கொரோனோ தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாரவாரம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி வரும் தமிழகத்தில் அடுத்ததாக பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம்? என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா 2வது அலை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2வது அலை அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த மே10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
6வது முறை நீட்டிக்கப்படுமா?
அதன்படி 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவலும் நன்றாக குறைந்துள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28-ந் தேதி முடிகிறது. இந்நிலையில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தளர்வுகள் என்னென்ன?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்திற்கு பின்னர் முறையான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்கள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
எந்த வகைக் கொரோனாவையும் தடுக்கும் சூப்பர் தடுப்பூசி!
உணவு பதப்படுத்துதல் துறையில் ஊக்குவிப்பு திட்டத்திற்கு ரூ. 11,000 கோடி!!
நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
Share your comments