மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான தகுதிகள் : ஆண்டு வருமானம் முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 10.11.2022ஆம் தேதி முதல் செயல்படுகிறது.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023க்குள் இணையதளம் மூலம் கோப்புகள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
Share your comments