கொரோனாத் தொற்று காரணமாக, தமிழகத்தில் மூடப்பட்டுள்ளப் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை வரும் 17ம் தேதி இறுதி முடிவு எடுக்கிறது.
கொரோனாத் தாக்கம் (Corona impact)
கடந்த 2019ம் ஆண்டு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா முதல் அலை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தைக் கடுமையாகத் தாக்கியது.
பள்ளிகள் மூடல்
இதன் காரணமாக, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு மேல் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
கொரோனா 2-அலை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளைத் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆலோசனைக்கூட்டம் (Consultation)
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், 17ம் தேதி காலை 10மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகிக்கிறார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்று, பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், பள்ளிகளை மீண்டும் திறந்து, நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களின் கருத்துக்களையும் கேட்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க...
மதுரை ஆதீனம் மறைவு- ஆதினத்தைக் கைப்பற்ற நித்தியானந்தாத் திட்டம்!
Share your comments