கொரோனா வைரசுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள், தற்போதைக்கு 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டிய அவசியம் இல்லை. நடைமுறையில் தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் அனைத்தும், 'டெல்டா, ஆல்பா' வகை கொரோனா வைரஸ், தொற்றை எதிர்த்து செயல்படும் திறனுடன் உள்ளது.
பூஸ்டர் டோஸ்
அவசியம் இல்லாத போது பூஸ்டர் டோஸ் போட்டால், அதிகப்படியான மருந்து, நோய் எதிர்ப்புத் திறனில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது உறுதி ஆகியுள்ளது.
வழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும், டெல்டா, ஆல்பா வகையில் மரபணு மாற்றம் பெற்றுள்ள அனைத்து வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தும் 80 சதவீதம் பாதுகாப்பு தருகின்றன. இரண்டு டோஸ் போட்ட சில வாரங்களில், ஒரு சிலருக்கு 'ஆன்டிபாடி' அளவு குறைந்து விட்டாலும் கவலைப்பட அவசியம் இல்லை.
காரணம், வைரசிற்கு எதிராக நோய் எதிர்ப்புத் திறன் வெளிப்படையாக குறைந்து இருந்தாலும், வைரசின் தன்மை, செயல்பாடு பற்றிய தகவல்கள் அனைத்தும் முழுவதுமாக செல்களில் பதிந்து இருக்கும். நோய் தொற்று ஏற்படும் போது, செல்கள் அதை எதிர்த்து போராடி அழித்து விடும்.
ஆதாரம்: டாக்டர் சவுமியா சுவாமிநாதன்,
தலைமை மருத்துவ விஞ்ஞானி,
உலக சுகாதார மையம், ஜெனிவா
மேலும் படிக்க
தடுப்பூசி போடவில்லை என்றால், பொது இடங்களில் அனுமதி மறுப்பு!
தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க இந்தியா முடிவு: உலக சுகாதார அமைப்பு பாராட்டு
Share your comments