உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி காங்கிரஸின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி. அவர் ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே விவசாய கடன் ரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
அறிக்கையின்போது, மேலும் அவர், "நாங்கள் இதுவரை மூன்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். ஒன்று பெண்களுக்கானது, இரண்டாவது இளைஞர்களுக்கானது. இதோ இப்போது மூன்றாவது அறிக்கை விவசாயிகளுக்கானது" என குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும்தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாநிலத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் அறிவித்தார். அதேபோல் புதிதாக 8 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் அனைத்து விவசாயக் கடனும் ரத்து செய்யப்படும், மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலுவை மின் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பெண்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ஸ்மார்ட்போன், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்கள் போன்றவை வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு, 50%-க்கும் மேல் பெண் பணியாளர்கள் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்களுக்கு வரிவிலக்கு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் திமுக பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் சலுகையை அறிவித்து உரிமைப் பயணம் என்ற பெயரில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது சிறப்பாகும். பாஜக அண்மையில் வெளியிட்ட உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற சலுகையை அறிவித்துள்ளது. காங்கிரஸும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் அறிவித்திருக்கிறது.
குறிப்பு:
பூ செடியோ, காய் செடியோ பூக்கள் உதிராமல் காக்க! பெருங்காய மோர் கரைச்சல்!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடும் முயற்சிகளை, அறிவிப்புகளை நடத்தி வருகிறது.
மேலும் படிக்க:
சியோமி-இன், Redmi Note 11 மற்றும் Note 11S smartphone-கள் இந்திய சந்தையில் அறிமுகம்
Share your comments