தமிழகத்தில், 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வரும் 14ம் தேதி இறுதி முடிவு செய்யப்பட உள்ளது.
பள்ளிகள் மூடல் (Closing of schools)
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டப் பள்ளிகள், தற்போது வரைத் திறக்கப்படவில்லை.
நோய் தொற்றுப்பரவலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
செப் 1ம் தேதி முதல் (Starting Sept 1)
கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கொரோனாத் தொற்றுப் பரவியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், கொரோனா பாதிப்பும் குறைந்துவருவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ம் தேதிக்கு பிறகு (After the 15th)
இதனையடுத்து வரும், 15ம் தேதிக்கு பின், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகள் நடத்தலாமா என, தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்தும், பள்ளி கல்வி வளர்ச்சி பணிகள் பற்றியும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் வரும், 14ம் தேதி நடைபெறுகிறது.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இதுதொடர்பாக, தமிழக தலைமை செயலர் இறையன்பு தலைமையில், பல்வேறு துறை செயலர்கள் தலைமையில், ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்களுக்கான (ECO)ஆலோசனை கூட்டத்தை, வரும், 14ம் தேதி சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகப், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
சுற்றறிக்கை (Circular
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி கல்வியின் பல்வேறு இயக்குனரகப் பணிகள் குறித்து, தனித்தனியாக பட்டியலிட வேண்டும். இதற்கான விபரங்களுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயம், அங்கீகாரம் நீட்டிப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுக்களுக்கானத் தீர்வு, அங்கீகாரம் இல்லாதப் பள்ளி விபரம், பாலியல் பிரச்னைகளைத் தீர்க்க கமிட்டி அமைத்தல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி ஆகியவை குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments