தமிழகத்தின் சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி,சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வட கடலோர தமிழக மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை (Chennai weather)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்
மழைபொழிவு (Rainfall in last 24 hours)
காவேரிப்பாக்கம் , ஏற்காடில் தலா 7 செ.மீ மழையும், விழுப்புரத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்ளுக்கு எச்சரிக்கை (Fisherman warning)
-
இன்று தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல், கடலோர கேரளா, கர்நாடகா, லட்சதீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
நாளை தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல், கடலோர கேரளா, கார்நாடகா,லட்சதீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள் மற்றும் கடலோர மகாராஷ்டிராவில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Unlock3.0: 3ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு
தாலிபாக்கியம் தரும் வரலட்சுமி விரதம் - இன்று கடைப்பிடிப்படுகிறது
மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கை- பல்வேறு தரப்பினர் வரவேற்பு!
Share your comments