தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் கோவையில் உள்ள பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை பாஜகவினர் மாட்டியதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரன் என்கிற பாஜக பிரமுகரை கைது செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இதேபோன்ற சம்பவங்கள் கவனிக்கப்பட்டன.
இது தொடர்பாக பேசிய திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல், `திமுகவினர் வேண்டுமென்றே இதில் சர்ச்சை செய்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் புகைப்படங்களை வைக்கலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை உள்ளது.
அதன் அடிப்படையில்தான் இந்த கோரிக்கையை முன் வைத்தோம். அந்த ஊராட்சிகளில் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள்தான் புகைப்படம் வழங்குகிறார்கள். எங்கள் கோரிக்கை மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்` என்றார்.
இந்த நிலையில் ஏப்ரல் 22-ம் தேதி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், "அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோதி போன்ற தலைவர்களின் படத்தை வைக்க வேண்டும் என்ற புரோட்டோகால் உள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பரமசிவம் மீண்டும் வந்தவுடன் அந்த வார்டில் உள்ள ஐந்து ரேஷன் கடைகளிலும் மீண்டும் நரேந்திர மோதி படத்தை மாவட்ட தலைவர் உடன் சென்று அவர் வழங்குவார். மறுத்தால் நான் வருவேன். என்னை தடுத்தால் மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவார். அடக்குமுறை மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க இயலாது. பாஜகவுக்கு மட்டும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க இயலாது," என்றார்.
மேலும் படிக்க
PMGKAY: 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் மோடி அரசாங்கம்
Share your comments