வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை (Heavy Rain)
இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு பெய்யக் கூடும் எனக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை முன்அறிவிப்பு ( Weather Forecast)
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 10 சென்டி மீட்டரும், சேலம் மற்றும் பந்தலூரில் தலா 5 சென்டிமீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Fisherman)
-
இன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்றும் நாளையும், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில், 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது.
-
இன்று முதல் வரும் 15ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
10ஆண்டுகளில் ரூ.8 லட்சம் சேமிக்க நீங்க ரெடியா? - அஞ்சலகத்தின் அருமையான RD திட்டம்!!
Share your comments