பிளஸ் 2 தேர்வு தொடர்பான தனது முடிவை மத்திய அரசுக்கு இன்று மாலைக்குள் தெரிவிப்பதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் ரத்து (Cancel exams)
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தேர்வு நடத்தத் திட்டம் (Examination plan)
2வது முறையாக இந்த ஆண்டும், தமிழகத்தில் 10ம் வகுப்புப் பொதுத்தோர்வுகள் ரத்தனா நிலையில், பிளஸ்2 எனப்படும் 12ம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தேதிகள் விரைவில் (Dates coming soon)
இதனிடையே ஒருபுறம் கொரோனாத் தொற்றுப் பரவல் தீவிரம் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக, பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளிப்போனது. ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தேதிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஆலோசனை (Ministerial Advice)
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. பிளஸ் 2 தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
கட்டாயப்படுத்தக்கூடாது (Should not be forced)
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் பெற்றோரைக் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். எனவே கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.
தொற்றுப் பரவல் குறைந்த பிறகு (After the spread of infection is low)
கொரோனாத் தொற்று பரவல் குறைந்த பிறகே மாணவர் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இன்று முடிவு ( today decide)
பிளஸ் 2 தேர்வு தொடர்பாகத் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்கிழமைக்குள் (25-5-21)மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். கொரோனாவை கண்டறியும் பணியில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்: தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி!!
Share your comments