இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு (WHO) சேர்த்துள்ளது. இந்த மருந்து 78% பாதுகாப்பளிப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கர்ப்பிணிகள் உடலில் இதைச் செலுத்தலாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
கோவேக்சின்
இந்தியாவில் கோவிஷீல்டு என அழைக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ரா செனீகா தடுப்பு மருந்து, ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்து, மாடர்னா தடுப்பு மருந்து ஆகியவற்றைப் போல, கோவிட்- 19 தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளின் பட்டியலில் தற்போது கோவேக்சின் (Covaxin) தடுப்பு மருந்தும் சேர்ந்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகள் செல்வதில் இருந்த சிக்கல் தீர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனை குழு மற்றும் உலகெங்கிலுமுள்ள நாடுகளின், மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்று ஆராய்ந்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள தரநிலைகளின் அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பதாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியால் கிடைக்கும் பலன்கள் அதன்மூலம் உண்டாக வாய்ப்பு உள்ள பாதிப்புகளை விடவும் அதிகமாக உள்ளது என்றும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
முடிவுக்கு வராத கொரோனா 2வது அலை: ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
தமிழகத்தில் புதிய வகை கொரோனா இல்லை: அமைச்சர் தகவல்!
Share your comments