ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்புகளினால் உருவாக்கப் பட்டு, 2013 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் டிசம்பர் 5 ஆம் தேதியை உலக மண் தினமாக கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு கரு பொருளாக 'மண்ணரிப்பை தடுப்போம், எதிர்காலத்தை காப்போம்' .
மண் என்பது, உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான முக்கிய அங்கமாக விளங்குகிறது. மண்ணிற்கும், மனிதனுக்கும் நேரடி தொடர்பு உண்டு... ஆனால் சமீப காலமாக மண்ணின் வளத்தை பாழ்படுத்தி அதை மலடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விவசாயத்தில், பயன்படுத்தும் அதிகப்படியான ரசாயன உரங்களினால் மண்ணிலுள்ள உயிர் சத்துக்கள், தழைச்சத்துக்கள் என நன்மை பயக்கும் அனைத்தும் முழுமையாக பாதிக்கப் படுகிறது. ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் நெகிழி மனிதனுக்கு மட்டுமல்லாது மண்ணுக்கும் பெரும் எதிரி ஆகும்.
விவசாயிகள் ரசாயன உங்களுக்கு பதிலாக அங்கக மற்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை காக்கலாம். இதன் மூலம் செலவும் குறைவதுடன் மண்ணில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற அடிப்படை சத்துக்கள் நிலைத்திருக்கும். பயிர் சுழற்சி அதாவது நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் சத்துக்கள் வீணாகாமல் அனைத்தும் முழுமையாக தாவரத்திற்கே செல்லும்.
இவ்வுலகம் தோன்றிய போது கோடிக்கணக்கான உயிரினங்கள், பல்லாயிர கணக்கான தாவரங்கள், செடிகள், மரங்கள் என அனைத்தும் சுகமாய் வாழ்ந்துள்ளன என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. ஆனால் அவற்றில் பல இன்று இவ்வுலகில் இல்லை... மேலும் பல அழியும் தருவாயில் உள்ளன... இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பருவ நிலை மாற்றம், வெப்பமயமாக்குதல், காடுகள் மற்றும் இயற்கை வளங்களை அழித்தல், வன விலங்குகளை வேட்டையாடுதல்... விளைவு இன்று இந்த புவி மாசுக்களின் மறு உருவாய் மாறி உள்ளது.
அரை நூற்றாண்டு முன்பு வரை செழுமையாக இருந்த நம் மண் வளம் இன்று நஞ்சாக மாறியிருப்பது வேதனைக்கு உரியது. அழகிய இந்த பிரபஞ்சத்தை மீண்டும் வளமையும், செழுமை படுத்தி பல்லுயிரும் வாழ தகுந்த இடமாக மாற்றி வரும் தலைமுறைக்கு ஆரோக்கியமான உலகை விட்டுச் செல்வது நம் அனைவரின் கடமையாகும். மரங்களை நடுவதன் மூலம் மண்ணரிப்பை தடுக்கலாம்... மாற்றம் நம்மில், நம் இல்லத்தில் இருந்து தொடங்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Mr.V.Varna Vishakar
Environmental Analyst
Share your comments