இன்று உலக சைவ உணவாளர் தினம். இயற்கையாக தாவரங்களில் இருந்து பெறப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இவற்றை மட்டுமே உணவாக உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் சைவ உணவாளர்கள்கள் ஆவர். முதன் முதலில் வட அமெரிக்க சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது உலகம் முழுவதுமுள்ள சைவ ப்ரியர்களுக்காக இந்நாளை உலக சைவ உணவாளர் தினமாக அறிவித்தது.
அசைவ உணவிற்கு எதிரான போராட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த தினத்தின் முக்கிய நோக்கம் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் சைவ உணவிலும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும், விலங்குகளின் மாமிசத்தில் சுற்று சூழல் மாசடைவதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பூமி அனைத்து உயிர்களும் வாழ நாம் அனுமதிக்க வேண்டும். இன்று அழிவின் விளிம்பில் பல உயிரினங்கள் இருக்க முக்கிய கரணம் மனிதர்களாகிய நாம் தான்.
சைவ உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
- 1970- களில் வெகு சிலரே சைவ பிரியர்களாக இருந்தனர். இன்று உலகம் முழுவதும் பரந்து, விரிந்து பல கோடி பேராக உள்ளனர். அனைத்து மருத்துவமும், ஆரோக்கியமான வாழ்விற்கு சைவ உணவையே பரிந்துரைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
- நாம் உண்ணும் உணவு உடலுக்கு நன்மை பயப்பதாகவும், எளிதில் செரிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்விரண்டும் சைவத்தில் உண்டு.
- 30-40% முளைவிட்ட தானியங்கள், பழங்கள், சமைக்காத பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால், அது உங்கள் உயிர்சக்திக்கு பக்கபலமாய் அமையும்.
- இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய் என அனைத்து நோயினையும் சைவ உணவுகள் கொண்டு கட்டுப்படுத்த இயலும்.
- நார் சத்துக்கள் மிகுந்த உணவான சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை, முட்டைக்கோஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
- சைவ உணவில் உடல் இயக்கத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளன.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments