
உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்தது. மாநாட்டின் முடிவில் விவாதிக்க பட்ட கருத்துக்களை முன் நிறுத்தி செயல் படுவதாக 17 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
மே 13 மற்றும் மே 14 ஆம் தேதி உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக 24 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா உட்பட 22 உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இதில் 16 வளரும் நாடுகளும், 6 பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளும் கலந்து கொண்டன. முதல் நாள் மாநாட்டில் உயர் அதிகாரிகளும், இரண்டாம் நாள் மாநாட்டில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் வர்த்தக ரீதியான சவால்கள், மற்றும் நெருக்கடிகள் அதனை விரைவில் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் போன்றவை விவாதிக்க பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்டோ அஸிவேடோ கூறுகையில், அனைத்து நாடுகளும் இணைந்து செயல் பட வேண்டும். மேலும் அவர் கூறுகையில் பெரும்பாலான வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகள் எதிர் கொள்ளும் வர்த்தக ரீதியான நெருக்கடிகளை களையும் வகையில் திட்டங்கள் வகுக்க படும் என்றார்.
வளர்த்த நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நிரந்திர உறுப்பினர்களான நாடுகள், வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்கும் வேளாண் மானியத்தை நிறுத்தம் படி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மாநாட்டில் விவாதிக்க பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் அனைத்தும் தொடர்ந்து வழங்குமாறு வலியுறுத்தின.
சமரச தீர்வு மையத்தின் உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். 7 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய சமரச தீர்வு மையத்தில் தற்சமயம் 3 உறுப்பினர்களே உள்ளனர். இதில் 2 உறுப்பினர்கள் வரும் டிசம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள். எனவே உடனடியாக உறுப்பினர்களை நியமிக்க வலியுறுத்த பட்டது.
இணையதளத்தின் மூலம் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் அதன் வழி முறைகள் பெரும்பாலான நேரங்களில் தெளிவற்றதாக உள்ளது எனும் கருத்தினை கலந்து கொண்ட அனைத்து நாடுகளும் முன் வைத்தன. இதற்கான வழி முறைகள் விரைவில் எடுக்கபடும் என உறுதியளிக்க பட்டது.
அடுத்த சுற்று விவாதம் பாரிஸ் மாநகரில் நடைபெறும் என எதிர் பார்க்க படுகிறது. அதில் முக்கிய விவாதமாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் எடுத்து கொள்ளப்படும் என கூறி மாநாட்டினை நிறைவு செய்தார்கள்.
Share your comments