கோவிட் தடுப்பூசி செலுத்த 'வாட்ஸ்ஆப்' (WhatsApp) மூலம் முன்பதிவு செய்யும் புதிய வசதியை, மத்திய சுகாதாரத்துறை இன்று அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 58 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்ஆப் மூலம் தடுப்பூசி
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் மூலம் (+91 9013151515) தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பெறும் வசதியை மத்திய சுகாதாரத் துறை அறிமுகம் செய்தது. ஆதே வாட்ஸ் ஆப் எண்ணைப் பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இடங்களை முன்பதிவு செய்யும் புதிய வசதி இன்று கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (ஆக., 24) தனது டுவிட்டர் பக்கத்தில், 'மக்களின் வசதிக்கான புதிய சகாப்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இப்போது, சில நிமிடங்களில் உங்கள் அலைபேசியில் வாட்ஸ்ஆப் வாயிலாக மிக எளிதாக கோவிட் தடுப்பூசி இடங்களை பதிவு செய்யலாம்' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
தமிழகத்தில் கொரோனா பரவல் 1 சதவீதமாய் குறைந்தது!
அக்டோபரில் 3வது அலை உச்சம் அடையுமென தேசிய பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை
Share your comments