1. செய்திகள்

RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Daisy Rose Mary
Daisy Rose Mary
தங்க நகைகளுக்கு 90 சதவீதம் வரை கடன்
Crecit : Khyber news

தங்க நகைகளுக்கு இனி வங்கிகளில் 90 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சந்தை நிலவரம், பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை

அதன்படி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை , தற்போது இருக்கும், 4 சதவீத வட்டி என்ற நிலையையே தொடர இருப்பதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நகைக் கடன்களுக்குக் கூடுதல் பணம்

தங்கநகை அடமான கடனில், தங்கத்தின் மதிப்பில், 90 சதவீதம் அளவுக்குக் கடன் வழங்க (Gold and jewellery, to be granted up to 90 per cent of the pledged value) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்கள், சிறு வணிகர்கள், தொழில்முனைவோர்கள் பயன் பெறுவார்கள். இந்த சலுகை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது, 75 சதவீதம் அளவுக்கு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

ரெப்போ வட்டி மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டியில் மாற்றம் இல்லை

ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் 4 சதவீதமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி (Reverse Repo rate) விகிதம் 3.35 சதவீதமாக தொடர்கிறது.

குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகளுக்கு ரிசர்வு வங்கி அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வசதி துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய வீட்டு வசதி வங்கிக்கு (National Housing Bank), 5,000 கோடி ரூபாய் கூடுதல் நிதி வசதி வழங்கப்படும்

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கான நிதி இருப்பை அதிகரிக்க, நபார்டுக்கும் (NABARD) 5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, மேலும் ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வகையில், இணைய வசதி இல்லாமலே, கார்டுகள் மற்றும் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி, பணப்பரிவர்த்தனைகளை (retail payments using your card or mobile phone) மேற்கொள்ளும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க... 

ஒகேனக்கல் அருவி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!

குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!

 

English Summary: You can now borrow up to 90 percent of value pledged against Gold and Jewellery Says RBI Published on: 07 August 2020, 09:35 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.