இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கை முன்னெடுத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், சிலர் ஊரடங்கை பயனுள்ள வகையில் நற்காரியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்று கூடி, மரக்கன்றுகளை (Saplings) நட்டு ஊரடங்கை பயனுள்ளதாக்கி உள்ளனர்.
மரக்கன்றுகள் நடுதல்
கொரோனா ஊரடங்கை (Corona Curfew) பயனுள்ளதாக மாற்றும் வகையில், கிராமம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியில், இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணலுார் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்தனர். அதற்காக உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். மழை வளம் பெருகவும், வருங்காலத்தில் ஆக்சிஜன் (Oxygen) தட்டுப்பாட்டால் மனித சமுதாயம் இடர்பாடுகளை சந்திக்காத வகையிலும், கிராமம் முழுதும், தென்னை, பனை, புளி, மா, புங்கன் என, 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
பராமரிப்பு
ஊரடங்கால் பள்ளி, கல்லுாரி மாணவர்களும், வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களும், வெட்டியாக பொழுதை போக்கி வந்தோம். இப்படி பொழுதை கழிப்பதை விட, இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து, மரக்கன்றுகளை நட துவங்கியுள்ளோம். மரக்கன்றுகள் நடுவதோடு இல்லாமல், தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மரங்கள் (Trees) வளர்ப்பது, எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இளைஞர்கள் கூறினர்.
மேலும் படிக்க
சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன!இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை
கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!
Share your comments