உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள் என்ற உரத்த குரல் ஒலித்து வருகிறது. இயற்கை சீரழிவுகளில் வேகமெடுத்து செல்லும் போது இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியும் நடந்து வருவது ஆறுதலை அளிக்கிறது. ஆறு. கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை அடுத்து வீடுகள் தோறும் கை கொடுத்து வந்தது கிணறுகள் (Wells) தான். வீடுகள், குடியிருப்புகளில் கிணறுகள் அமைத்து, அதிலிருந்து அனைத்து தேவைகளுக்கும் நீர் பெற்று வந்தனர்.
தண்ணீர் தேவை அதிகரிப்பு:
மக்கள் தொகை, குடியிருப்புகள் பெருக்கம் காரணமாக தண்ணீர் தேவை அதிகரித்தது. போர்வெல்களின் (Bore well) எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. நிலத்தடி நீர் (Ground water) சேமிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. இதனால் தண்ணீர் தேவை பல் மடங்கு அதிகரித்தது. இந்நிலையை மாற்றும் முயற்சியில் ராஜபாளையத்தில் பழையபாளையம் ராஜூக்கள் இளைஞர் சங்கம் முன்னெடுத்து வருகிறது. சங்கத்தின் இளைஞர்கள் குடியிருப்பு பகுதிகளில் கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டெடுத்து நிலத்தடி நீர் (Ground water) சேமிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் பணியை பலரும் பாராட்டுகின்றனர்.
கிணறுகள் மீட்டெடுப்பு:
இளைஞர்கள் பலர் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடுவதில்லை. நகராட்சி நிர்வாகம் ஒத்துழைப்புடன் சங்கத்தின் இளைஞர்கள் நிலத்தடி நீர் மீட்டெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மூடப்பட்ட கிணறுகள், குப்பை கொட்டப்படும் பயனற்ற கிணறுகளை மீட்டு சுத்தம் (Clean) செய்து மழை நீர் சேமிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர். இதனால் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் பெருகும். கைவிடப்பட்ட கிணறுகளை அடையாளம் கண்டு முறைப்படி அனுமதி பெற்று கிணறுகள் மீட்கப்படுகிறது. தெருக்களில் குப்பைகள் கொட்டுவதை தடுத்தல், குப்பை தொட்டியில் (Dust bin) மட்டுமே குப்பையை கொட்ட வலியுறுத்துதல், பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி., கேமரா (CCTV camera) அமைப்பது, ஆதரவற்றோர்க்கு உணவு வழங்குவது, மரக்கன்றுகள் (Saplings) நட்டு பராமரிப்பது என சேவை பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று இளைஞர் சங்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தொடர்புக்கு
93452 07094
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் 2024-க்குள் இரு மடங்காகும்! ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!
Share your comments