1. மற்றவை

100 கி.மீ மைலேஜ்!? சூப்பர் டெக்னாலஜி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Electric Bike

ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் கைனடிக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. பிறகு ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இரு சக்கர வாகன விற்பனையில் சக்கை போடு போட்டது. இப்போது ஹீரோ நிறுவனம் தனியாக பிரிந்து சென்றுவிட்டது. அதன் பிறகும் ஹோண்டா நிறுவனம் சளைக்கவில்லை. தனியாக பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது. புதிய நவீன நான்கியர் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ததே ஹோண்டா நிறுவனம் தான் எனலாம். அந்த வகையில் முதல் ஸ்கூட்டராக அறிமுகமான ஆக்டிவா இப்போதும் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறது. பல ஆண்டுகளாக டாப் சேல் ஸ்கூட்டராகவும் வலம் வருகிறது ஆக்டிவா ஸ்கூட்டர்கள்.

நான் கியர் ஸ்கூட்டர்களை கைனடிக் நிறுவனத்தோடு இணைந்து 1984 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்திருந்தது ஹோண்டா நிறுவனம். அந்த அனுபவத்தோடு தான் புதிய நவீன நான்கியர் ஸ்கூட்டரான ஆக்டிவாவை தயாரித்துள்ளது ஹோண்டா நிறுவனம். 2000ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகமானதில் இருந்து இன்று வரை இந்தியாவின் வெற்றிகரமான நான்கியர் ஸ்கூட்டராக இருக்கிறது ஆக்டிவா. அதோடு தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் என அடுத்தடுத்து அப்டேட்களுடன் ஆக்டிவாவை மெருகேற்றிக் கொண்டிருக்கிறது ஹோண்டா நிறுவனம். அதன் தொடர்ச்சியாக வெளிவர இருப்பது தான் ஆக்டிவா 7ஜி.

புதிய ஆக்டிவா 7ஜி 100 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்கிற ஆச்சரிய செய்தி அதன் வரவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்துள்ளது. சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆக்டிவா 7ஜி-யின் அறிமுகம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம். ஆக்டிவா 7ஜி ஸ்கூட்டர் செயல்படும் விதம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கவைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிலோமீட்டர் மைலேஜ் என்பது சாத்தியமா எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால் ஆக்டிவா 7ஜியில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை பார்த்தால் இது சாத்தியம் தான். ஏற்கனவே ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் எஞ்சின்களை தயாரித்து பயன்படுத்தி வரும் ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா 7ஜி-க்காக புதிய என்ஹேன்ஸ்ட் ஸ்மார்ட் பவர் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது புதிய ஆக்டிவா 7ஜி-யில் தனி பேட்டரியுடன் கூடிய எலக்டட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஸ்கூட்டர் ஓடும் பொது தானாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். அதோடு பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது எலக்ட்ரிக் மோட்டார் ஸ்டார்ட் ஆகிவிடும். பத்து முதல் பதினைந்து கிலோ மீட்டர் வேகம் தொடங்கி 40 கிலோ மீட்டர் செல்லும் வரை எலக்ட்ரிக் மோட்டார் மட்டுமே பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க:

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு

பெங்களூரு சாலையில் திடீரென பணமழை

 

English Summary: 100 km mileage!? Super technology Published on: 30 January 2023, 12:49 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.