1. மற்றவை

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பல தொழிற் பிரிவுகளில் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு பெறலாம்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
10th pass can get training and Central Govt certification in many professions and job opportunity!

திறன் மேம்பாடு ஒரு மாறும் மற்றும் போட்டித் திறன் கொண்ட தொழில்முறை உலகில் நம்மை, முற்றிலும் வெறுப்படுத்திக் காட்டவும், வாய்ப்புகளை பயன்படுத்தவும் உதவியாக அமையும், அதே நேரம், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் பெறலாம்.

கிண்டி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 31.08.2023 வரை நேரடி மாணவர் சேர்க்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் நேரடி சேர்க்கை குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த முழுமையான தகவல் இப்பதிவில் பார்க்கலாம்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் உள்ள Desktop Publishing Operator, Digital Photographer, Food Production (General), Food and Beverage Service Assistant, Smartphone Technician cum App Tester, Industry 4.0 வின் கீழ் New age courses- Advanced Computer Numerical Control Technician (CNC), Basic Design and Virtual verifier, Manufacturing Process Control and Automation, Industrial Robotics & Digital Manufacturing ஆகிய தொழிற் பிரிவுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது, இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரவிரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் நேரடியாக பயிற்சியில் சேரலாம். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு அரசால் கட்டணமில்லா பயற்சி, விலையில்லா சீருடை மாதாந்திர உதவித் தொகை ரூ.750 மற்றும் விலையில்லா வரைபடக்கருவிகள் என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் வழங்கப்படும், மேலும் விவரங்கள் அறிய இத்தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கை உதவிமையத்தை நேரில் அனுகலாம், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசிஎண், 044 -22501350.

மேலும் படிக்க: நகர்புற விவசாயம் செய்ய 40பேருக்கு மாஸ்டர் டிரேய்னரிங் அளிக்கப்படுகிறது: இன்றே விண்ணப்பிக்கவும்!

மீண்டும், திறன் மேம்பாடு என்பது இன்றைய வேகமாக வளர்ந்து வரும் தொழில்முறை உலகில் தொழில் வெற்றிக்கான ஒரு மூலக்கல்லாகும். தொழில்கள் நிலையான மாற்றத்திற்கு உட்பட்டு வருவதால், பலதரப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்வது நம்மை தனித்துவமாக காட்ட உதவும். அதே நேரம், இத்திட்டம், மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றும் ஓர் வாய்ப்பாகவும் அமையும், அதே நேரம் சமீபத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதுமையான வழி வழங்கும் என்பது குறிப்பிடதக்கது. எனவே, நிச்சயம் இது உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.

மேலும் படிக்க:

வீட்டு கொல்லைப்புறத்தில் கோழி வளர்க்க சரியான தேர்வு: வெற்றிக் கண்டுள்ளார் மாம்பழ விவசாயி

இந்திய மீன் வளர்ப்பு முறையில் நார்வே நவீனம் பயனளிக்குமா?

English Summary: 10th pass can get training and Central Govt certification in many professions and job opportunity! Published on: 23 August 2023, 04:32 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.