மாக்களிடம் இருந்து மக்களை வேறுபடுத்திக் காட்டுவது சிரிப்பு. குறிப்பாக 6 அறிவு ஜீவன்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இது.
ஆனால், தன் நாட்டு மக்கள் சிரிக்க 11 நாட்கள் ஒரு நாடு தடை விதித்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உண்மை அதுதான். வடகொரியாவில் நடக்கிறது இந்தக் கொடுமை.
அதிபரின் உத்தரவு (Order of the Chancellor)
தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி, 11 நாட்கள் மக்கள் யாரும் சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது என அதிரடி உத்தரவுகளை விதித்திருக்கிறார் அதிபர் கிம் ஜோங் உன்.
17 ஆண்டுகால ஆட்சி
வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது.
சிரிக்கக்கூடாது (Do not laugh)
இந்த நிலையில் அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங்கின் நினைவு தினத்தையொட்டி, நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குற்றவாளிகள் (Criminals)
கடந்த காலத்தில், துக்க காலத்தில் குடித்துவிட்டுப் போதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
தொடரும் நடைமுறை (Continuing practice)
கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கபடும். ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 - வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments